குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 11:36PM by PIB Chennai

தமிழ்நாடு, தெலங்கானா, மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

இதன்படி, தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த திரு ஆர் என் ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அம்மாநில ஆளுநராக இருந்த டாக்டர் சி வி ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

கேரள மாநில ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த திரு ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த திரு ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து மாநில ஆளுநராக திரு நந்த் கிஷோர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில ஆளுநராக ஓய்வு பெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் திரு சையத் அதா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளார். 

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்த திரு கவீந்தர் குப்தா இமாச்சலப் பிரதேச ஆளுநராகவும், தில்லி துணைநிலை ஆளுநராக இருந்த திரு வினய் குமார் சக்சேனா லடாக் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரு தரந்ஜித் சிங் சந்து தில்லி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் தாங்கள் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து   இவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

***

(Release ID: 2235785)

TV/SV/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235892) வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu , Malayalam