உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் சிஐஎஸ்எஃப் நிறுவன நாள் த விழாவில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 6:19PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, நாளை (மார்ச் 6) ஒடிசா மாநிலம் முண்டாலியில் நடைபெறவுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) 57-வது நிறுவன நாள் விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, ஒடிசாவின் தடய அறிவியல் மற்றும் விசாரணை உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கியத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். புவனேஸ்வரில் அமையவுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (என்எப்எஸ்யூ) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் அவர், அதன் தற்காலிக வளாகத்தைக் காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.

 

மேலும், அந்த வளாகத்தை ஒட்டி அமையவுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கும்  அவர் பூமி பூஜை செய்கிறார். புவனேஸ்வரில் 'புதிய நீதிச் சட்டம்'  குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைக்கும் அவர், நடமாடும் தடய அறிவியல் வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பல புதிய காவல் நிலையக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வின் போது, ஐஐடி புவனேஸ்வர் மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

 

இந்த விழாவில் மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், ஒடிசா முதல்வர் திரு. மோகன் சரண் மாஜி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 40 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள இந்த புதிய பல்கலைக்கழக வளாகம், தடய அறிவியல் துறையில் ஒரு சிறந்த மையமாகத் திகழும். தற்காலிக வளாகத்தில் டிஜிட்டல் தடய அறிவியல் மற்றும் சைபர் குற்ற விசாரணை தொடர்பான உயர்கல்வி வகுப்புகள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235675&reg=3&lang=1

 

 செய்தி வெளியீட்டு எண்:2235675

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235774) வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada