இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய பட்ஜெட்டில் ஆர்வம் செலுத்தும் இளைய தலைமுறையினர் பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் மை பாரத் போட்டியின் இரண்டாம் கட்டத்தில் 47,000 கட்டுரைகள் சமர்ப்பிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 3:52PM by PIB Chennai
இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் மேரா யுவ பாரத் தளம் ஏற்பாடு செய்த 'மை பாரத் பட்ஜெட் குவெஸ்ட் 2026' எனப்படும் பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துவது தொட்பான ஆலோசனைகளை வழங்கும் போட்டிக்கு, நாடு முழுவதும் இளைஞர்களிடமிருந்து பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தில் கிட்டத்தட்ட 47,000 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, இந்தியாவின் புதிய தலைமுறை இளைஞர்கள் மத்திய பட்ஜெட்டில் ஆர்வம் செலுத்தி, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கான யோசனைகளை வழங்க வாய்ப்புகளை வழங்குகிறது. இதில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை இந்த பெரிய அளவிலான பங்கேற்பு பிரதிபலிக்கிறது.
2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இளைஞர் சக்தியால் இயக்கப்படும் பட்ஜெட்டாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, புதுமைக் கண்டுபிடிப்பு, எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் இந்திய இளைஞர்களை மேம்படுத்த இந்த பட்ஜெட் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது .
இந்தச் சூழலில், மை பாரத் தளத்தில் (mybharat.gov.in) ஏற்பாடு செய்யப்பட்ட 'மை பாரத் பட்ஜெட் குவெஸ்ட் 2026' என்ற போட்டி மத்திய பட்ஜெட்டை நாட்டின் இளைஞர்களிடம் கொண்டு செல்லும் ஒரு தனித்துவமான முயற்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அதன் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்ளவும், அதன் தொலைநோக்குப் பார்வையைப் பற்றி சிந்திக்கவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கான யோசனைகளை வழங்கவும் முடியும்.
நாடு தழுவிய இணையதள வினாடி வினா மூலம் இளைஞர் விழிப்புணர்வையும் மத்திய பட்ஜெட் பற்றிய புரிதலையும் வலுப்படுத்துவதில் முதல் கட்டம் கவனம் செலுத்தியது. அதில் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 12,00,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அதில், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை அதிக பங்கேற்புடன் முதல் மூன்று மாநிலங்களாக உருவெடுத்தன.
வினாடி வினாவைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலம்/ யூனியன் பிரதேசத்திலிருந்தும் சிறப்பாகச் செயல்பட்ட பங்கேற்பாளர்கள் கட்டுரைச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தொடர்பான கருப்பொருள்கள் குறித்த தங்கள் கருத்துக்களையும் கொள்கைக் கண்ணோட்டங்களையும் முன்வைத்தனர். ஒன்பது முக்கிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இதில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மாநில/ யூனியன் பிரதேச அளவிலான வெற்றியாளர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அப்போது அவர்கள் மத்திய பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் அதன் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிப்பார்கள்.
இந்த கலந்துரையாடல், இளம் இந்தியர்கள் நாட்டின் பிரதமருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த, தற்சார்பு கொண்ட நாடாக மாறுவதற்கான பயணத்தில் நாட்டின் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235552®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235627)
வருகையாளர் எண்ணிக்கை : 115