ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் பங்கேற்புடன் கூடிய நீர் பாதுகாப்புத் திட்டம் சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்ட விவசாயிகளின் முன் முயற்சி நீர் பற்றாக்குறையை நீர் பாதுகாப்பாக மாற்றியமைக்க உதவியது

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 1:08PM by PIB Chennai

பருவநிலை சவால்களில் ஒன்றாக நீர் பற்றாக்குறை மிகவும் அழுத்தமான சூழலை உருவாகி வரும் காலகட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கொரியா மாவட்டம், மிகவும் சக்திவாய்ந்த தீர்வுகளாக உள்ள பெரிய அணைகள் கட்டுவது அல்லது கனரக இயந்திரங்களை சார்ந்து இல்லாமல், அவை மக்களின் பங்கேற்புடன் தொடங்குகின்றன.

நீர் பற்றாக்குறை காரணமாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கொண்ட மாவட்டத்தில், மக்கள் பங்கேற்புடன் கூடிய நீர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், நீர் பாதுகாப்பிற்கான முன் மாதிரித் திட்டமாக  மாற்றிமைத்துள்ளது.

ஆவா பானி ஜோகி இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு சிறிய அளவிலான நீர் சேமிப்புக் குளங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளைக் கட்டுவதற்கு  தங்களது நிலத்தில் 5 சதவீதப் பகுதியை ஒதுக்குகின்றனர். இந்த கட்டமைப்புகள் மழைநீரை நேரடியாக வயல்களுக்குள் சென்று சேர்வதுதான், பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர் நிலத்தில் சேகரிக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்கிறது.

இத்திட்டம் மண் மற்றும் நீர்நிலைகளை மீட்பதற்கு உதவுகிறது.

மண் அரிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது

வறட்சியான காலங்களில், பயிர்களின் ஈரப்பதம் சீராகவும் நீடித்த தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளது

நிலத்தடி நீர் மீட்பு நிலையானதாகவும் நீடித்ததாகவும் மாறியுள்ளது

நிலையான நீர் மேலாண்மைக்கு பெரிய அளவிலான இடம் அல்லது அதிக மூலதன முதலீடு தேவையில்லை என்பதை இந்த முன் மாதிரித் திட்டம்  நிரூபிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235468&reg=3&lang=1

***

TV/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235508) வருகையாளர் எண்ணிக்கை : 76
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu