பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துளளார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 7:28PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"பிஜேபி அரசு அதன் கொள்கைகள், நோக்கங்களைப் போலவே வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்துள்ளது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் மீரட் மெட்ரோ ஆகும். இது விவசாயிகள் முதல் கைவினைக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும்."

"கடந்த சில ஆண்டுகளில் எங்களது அரசு செய்து கொண்ட உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்கள், மீரட் உட்பட உத்தரபிரதேசத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கப் போகின்றன."

"இந்தியாவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு, நம் நாட்டு மக்களைப் பெருமையில் ஆழ்த்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த உலகளாவிய நிகழ்வை அரசியலுக்கான தளமாக மாற்ற முயற்சித்த விதம் வெட்கக்கேடானது."

"உத்தரப்பிரதேசத்தை நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற பிஜேபி-யின் இரட்டை இன்ஜின் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்."

"நாட்டின் அதிநவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடம் முழுவதையும் நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறேன்."

"நமது மக்களுக்கு பயணத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும் மாற்றுவதற்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். மீரட் மெட்ரோ கட்டமைப்பு இங்குள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்."

"மீரட் மெட்ரோவில் பயணம் செய்யும் போது குழந்தைகளுடனான உரையடல் எனது அனுபவத்தை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றியது."

"வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மீரட் மக்களின் உற்சாகம் எனக்குப் புதிய சக்தியை வழங்குகிறது."

***

(Release ID: 2231538)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235316) வருகையாளர் எண்ணிக்கை : 25