பிரதமர் அலுவலகம்
குவால்காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரதமரைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
20 FEB 2026 9:12PM by PIB Chennai
குவால்காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கிறிஸ்டியானோ ஆர். அமோன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்தியாவின் துடிப்பான புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சூழல் அமைப்பைப் பிரதமர் எடுத்துரைத்தார். செமி கண்டக்டர், சிப் உற்பத்தி ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குவால்காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கிறிஸ்டியானோ ஆர். அமோனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன், செயற்கை நுண்ணறிவு, பிற எதிர்கால தொழில்நுட்பத் துறைகளில் குவால்காம் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து விவாதித்தோம். செமி கண்டக்டர், சிப் உற்பத்தி ஆகியவற்றில் நெருக்கமாக பணியாற்றுவது குறித்தும் நாங்கள் பேசினோம்.”
***
(Release ID: 2230989)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2235285)
आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam