பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 6:45PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூற்றியுள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா 2 லட்சம் கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 வழங்கப்படும்". 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233990&reg=3&lang=1          

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234024) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam