பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 7:41PM by PIB Chennai

வரிசை எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ உடன்படிக்கையின் பெயர்

விவரம்

1.

நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மேம்பட்ட நிலத்தில் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கனிம ஆய்வு, தரவு பகிர்வு, முதலீடு மற்றும் நிலையான வள மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்திய-இஸ்ரேல் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்துகிறது.

2.

குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கண்காட்சிகள், ஆராய்ச்சி, வெளியீடுகள் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம் மூலம் பகிரப்பட்ட கடல்சார் பாரம்பரியத்தைக் கொண்டாட இந்திய-இஸ்ரேல் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் மற்றும் பரந்த பொது ஈடுபாட்டை ஆதரிக்கிறது.

3.

2026-2029 காலகட்டத்திற்கான கலாச்சார பரிமாற்ற திட்டம்

திருவிழாக்கள், பயிலரங்கங்கள் மற்றும் நிபுணர்களின் வருகைகள் வாயிலாக இசை, நாடகம், காட்சி சார்ந்த கலைகள், நடனம் மற்றும் பிற படைப்புத் துறைகளில் பரிமாற்றங்கள் மூலம் இந்திய-இஸ்ரேல் கலாச்சார உறவுகளை கலாச்சார பரிமாற்ற திட்டம் ஊக்குவிக்கிறது, பரஸ்பர புரிதலை வலுப்படுத்துகிறது.

4

யுபிஐ-ஐ செயல்படுத்துவது தொடர்பாக என்பிசிஐ  இன்டர்நேஷனல் மற்றும் இஸ்ரேலின் எம்ஏஎஸ்ஏவி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) மூலம் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை செயல்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5

இந்திய-இஸ்ரேல் வேளாண்மை புத்தாக்க மையத்தை நிறுவுவது தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும்இஸ்ரேலின் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான முகமைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

துல்லியமான விவசாயம், செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்ப்பாசனம், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற அடுத்த தலைமுறை விவசாய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், இனப்பெருக்கக் கணிக பரிமாற்றம், செயல்விளக்கங்கள், அறுவடைக்குப் பிந்தைய தீர்வுகள் மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ஒரு கூட்டு புதுமை மையத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவுகிறது.

6

தொலைநோக்கு முறை துறையில் ஒத்துழைப்பு

கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கருவிகள் மூலம் உத்திசார் தொலைநோக்கு பார்வை, இடர் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப திட்டமிடல் ஆகியவற்றை வலுப்படுத்த தொலைநோக்கு முறையில் இந்திய-இஸ்ரேல் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.

7

மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வர்த்தகம், பயிற்சி, புதுமை மற்றும் சிறப்பு மையம் மூலம் மேம்பட்ட அமைப்புமுறைகள், நோய் மேலாண்மை, கடலுயிரி  வளர்ப்பு மற்றும் கடற்பாசி ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் இந்திய-இஸ்ரேல் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

8

சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் மற்றும் இஸ்ரேல் பங்கு ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தகவல் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள், நிதிநுட்பம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதுமை சார்ந்த சூழலியலை  வளர்ப்பதற்கான முக்கிய துறை மேம்பாடுகள் குறித்த புதுப்பிப்புகள் மூலம், நிதி சேவைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

9

வணிகம் மற்றும் சேவைகள் துறையில் தொழிலாளர் இயக்கம் குறித்த அமலாக்க நெறிமுறை

சில்லறை விற்பனை, துப்புரவு, தளவாடங்கள், கிடங்கு, உணவு பதப்படுத்துதல், விருந்தோம்பல் மற்றும் மறுசுழற்சி போன்ற துறைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகள் மூலம் இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்பை அணுக இந்த நெறிமுறை உதவுகிறது.

10

உற்பத்தித் துறையில் தொழிலாளர் இயக்கம் குறித்த அமலாக்க நெறிமுறை

இது ஜவுளி, உலோகம், மின்னணுவியல், ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல், மரம் மற்றும் காகிதம், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற தொழில்துறைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் தொழில்களில் பணியமர்த்தலை நடைமுறைப்படுத்துகிறது.

11

உணவகத் துறையில் தொழிலாளர் குறித்த அமலாக்க நெறிமுறை

இது உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகங்களில் பணியமர்த்தலை நடைமுறைப்படுத்துகிறது.

12

செயற்கை நுண்ணறிவு  பயன்பாட்டின் மூலம் கல்வியை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்த ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மனிதனை மையமாகக் கொண்ட கற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. புதுமையான கற்பித்தல், ஆசிரியர் மேம்பாடு, ஒழுங்குமுறை கட்டமைப்புகள், சமமான செயற்கை நுண்ணறிவு அணுகல், ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள கல்விக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு எழுத்தறிவை ஒருங்கிணைத்தல் முதலியவை இதில் அடங்கும்.

13

இஸ்ரேலிய வணிக தீர்ப்பு வாரிய நிறுவனம் மற்றும் இந்திய தீர்ப்பு வாரிய மன்றம் இடையேயான ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளிலும் நிபுணத்துவத்தை வலுப்படுத்த அறிவுசார்  பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள் மற்றும் கூட்டுப் பயிற்சி மூலம் தீர்ப்பு வாரியம் மற்றும் மத்தியஸ்தத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

14

4வது இந்திய-இஸ்ரேல் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் அறிக்கை சமர்ப்பிப்பு

தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தின் நான்காவது பதிப்பு இஸ்ரேலில் நவம்பர் 2025 இல் நடைபெற்றது. மேலும் இரு தரப்பு அரசுகளிடம்  ஒரு கூட்டறிக்கை வழங்கப்பட்டது. இந்த அறிக்கை, தொழில்துறை போக்குகளுடன் கொள்கைகளை சீரமைப்பதற்கும், பொது-தனியார் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார முடிவெடுப்பதை ஆதரிப்பதற்கும் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வழங்குகிறது.

15

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும்,  ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்திற்கும்  இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

புத்த மத ஆய்வுகள், தொல்லியல், கணிதம் மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் பரிமாற்றங்களுக்கான கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்குகிறது.

16

இந்தியாவில் இந்தோ-இஸ்ரேல் சைபர் சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான உடன்படிக்கை

அரசு, தொழில் மற்றும் கல்வித்துறை இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், சைபர் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கும், இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஒரு கூட்டு சைபர் மையத்தை நிறுவுகிறது.

17

செயற்கை நுண்ணறிவு துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவை ஆதரித்தல், சிவில் துறைகளில் பயன்பாடுகள், கல்வி ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பொது-தனியார் கூட்டாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

 

 

அறிவிப்புகள்

1. சிறப்பு உத்திசார் கூட்டாண்மைக்கு உறவை வலுப்படுத்துதல்

2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கூட்டு ஆணையம் அமைச்சக நிலைக்கு உயர்த்தப்பட்டது

3. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தலைமையிலான முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பதற்கான முயற்சி

4. நிதி சார்ந்த உரையாடல்

5. தொழில்நுட்ப-நுழைவாயில் முன்முயற்சி

6. விவசாய ஆராய்ச்சியில் 20 கூட்டு உதவித்தொகைகள்

7. கூட்டு ஆராய்ச்சிகளுக்கு இரு தரப்பினரின் பங்களிப்பை அதிகரித்தல்

8. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார்  50,000 இந்திய தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு.

9. இந்திய-இஸ்ரேல் கல்வி ஒத்துழைப்பு மன்றம்

10. இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவுக் குழு

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233226&reg=3&lang=2

(Release ID: 2233226)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2233312) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Kannada , Malayalam