ஜல்சக்தி அமைச்சகம்
உள்ளூர் மொழியிலேயே கிராமத்திற்கான தூய நீர் குறித்த கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2026 5:26PM by PIB Chennai
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை 'சுஜல் கிராம் சம்வாத்' நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பை இன்று நடத்தியது. 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 6 கிராமங்களில், அந்தந்த வட்டார மொழிகளில் இந்த உரையாடல் நிகழ்ந்தது. 2,000-க்கும் மேற்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், மகளிர் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர்.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறைச் செயலாளர் திரு. அசோக் கே.கே. மீனா பேசுகையில், ஜல் ஜீவன் இயக்கத்தின் அடுத்த கட்டமாக, உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளைப் பராமரித்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதே முக்கிய இலக்கு என்றார். குடிநீர் திட்டங்களை இயக்குவதும், பராமரிப்பதும் கிராம ஊராட்சிகளின் பொறுப்பு என வலியுறுத்திய அவர், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க மாவட்ட அலகுகள் பலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், மார்ச் 8 முதல் 22 வரை நாடு முழுவதும் 'ஜல் மகோத்சவம்' கொண்டாடப்படும் என்றும், இதன் மூலம் குடிநீர் திட்டச் சொத்துக்கள் முறையாக ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் நீடித்த குடிநீர் மேலாண்மையை உருவாக்குவதே இந்த 'சம்வாத்' நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232238®=3&lang=1
செய்திவெளியீட்டு எண் 2232238
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232456)
வருகையாளர் எண்ணிக்கை : 7