பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2026 ஜனவரி மாதத்தில் 90.41% அளவிற்கு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது; நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2026 11:03AM by PIB Chennai
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, 2026 ஜனவரி மாதத்திற்கான செயலகங்களின் சீர்திருத்தங்கள் குறித்த 27-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 5,188 இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களின் 1,88,687 சதுர அடி அலுவலக பகுதியும், கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களின் 62,129 சதுர அடி அலுவலக பகுதி உட்பட மொத்தம் சுமார் 4.34 லட்சம் சதுரஅடி அலுவலக பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
ரயில்வே, கனரக தொழில்துறை, நிலக்கரி அமைச்சகங்கள் போன்ற அமைச்சகங்களின் கீழ் உள்ள அலுவலகங்கள் மற்றும் பகுதிகளில் பழைய பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம், ரூ 115.85 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 1,82,000 நேரடி கோப்புகள் ஆய்வுசெய்யப்பட்டு 81,322 கோப்புகள் நீக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1,032 பரிந்துரைகள், மாநில அரசுகளின் 375 பரிந்துரைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. பொதுமக்களின் 5,57,852 குறைகளுக்கு (90.41%) தீர்வுகாணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231655®=3&lang=1
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2231745)
வருகையாளர் எண்ணிக்கை : 6