குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 4:32PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், நாளை (2026 பிப்ரவரி 22) தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, மதுரை வண்டியூரில், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலுக்கும், சிவகங்கையில் உள்ள ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதா கிருஷ்ணன் செல்ல உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231212&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231341) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam