பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 4:29PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் இன்று தெரிவித்த கருத்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்ற பிரதமர், மனிதர்களை மையப்யபடுத்திய கட்டமைப்பு மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

“சரியான புரிதலில் இருந்து, சரியான செயல்பாடு வருகிறது” என்ற பகவான் புத்தரின் போதனையை நினைவு கூர்ந்த திரு மோடி, உரிய நேரத்தில் நல்ல நோக்க மற்றும் சரியான முடிவுகள் மூலம் செயற்கை நுண்ணறிவின் ஆக்கப்பூர்வ தாக்கத்தை உறுதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உலகளாவிய கொவிட் பெருந்தொற்று காலத்தில் மனிதகுலத்திற்கு தொழில்நுட்பம் எவ்வாறு சேவை செய்தது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், டிஜிட்டல் தடுப்பூசி தளம் உரிய நேரத்தில் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உதவி செய்தது.

மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் மையமாக இருப்பது நெறிமுறைகள் என்பதை எடுத்துரைத்த திரு மோடி, செயற்கை நுண்ணறிவுக்கான நெறிமுறைகளும் எல்லையற்றதாக இருக்க வேண்டும் என்றார். ஏஐ தயாரிக்கும் நிறுவனங்கள், லாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வலுவான நெறிமுறை உறுதிப்பாடுகளுக்கான அவசியத்தை உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னேற விரும்பும் இந்தியா, செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், இதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஏஐ இயக்கத்தின் கீழ், ஏற்கனவே 38,000 ஜிபியுக்கள் உள்ளன என்றும் அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 24,000 ஜிபியுக்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியா தனது புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகத் தரத்திலான கணினி சக்தியை மிகவும் குறைந்த செலவில் வழங்குவதாக திரு மோடி குறிப்பிட்டார். ஏஐ கோஷ் (தேசிய தரவுத் தளம்) உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் 7,500-க்கும் அதிகமான தரவு தொகுப்புகள், 270 ஏஐ மாதிரிகள், தேசிய வள ஆதாரங்களாக பகிரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230249&reg=3&lang=1

 

****

TV/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2230447) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Odia , Malayalam