பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிலன் 2026 ஒன்பது ஆசியான் உறுப்பு நாடுகளின் கடற்படைப் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங் கலந்துரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 3:43PM by PIB Chennai

மிலன் 2026 கடற்படைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (பிப்ரவரி 19, 2026) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒன்பது ஆசியான் உறுப்பு நாடுகளின் கடற்படைத் தலைவர்கள், கடற்படை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை', பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர ஒத்துழைப்பு  ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

மிலன் 2026-ல் ஆசியான் கடற்படைகளின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் வரவேற்றார். இந்தப் பயிற்சி 1995-ம் ஆண்டு நான்கு நாடுகளின் கடற்படைகளுடன் தொடங்கியதிலிருந்து பிப்ரவரி 2026-ல் 74 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய பயிற்சியாக வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தோ-பசிபிக் நாடுகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு, தலைமைத் தளபதிகளின் மாநாடு, சர்வதேச கடற்படை ஆய்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் இந்தோ-பசிபிக் உத்தியின் மையத் தூண் ஆசியான் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். பகிரப்பட்ட பாதுகாப்பு என்பது பிராந்திய செழிப்புக்கு அடித்தளம் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். மிலன் 2026-ன் கருப்பொருளான 'தோழமை, ஒத்துழைப்பு' என்ற உணர்வுடனும், சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டுடனும் இந்த கலந்துரையாடல் நிறைவடைந்தது.

***

(Release ID: 2230222)

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230281) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam