உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அசாமின் நாதன்பூர் கிராமத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 1:31PM by PIB Chennai

எல்லைப்புற கிராமங்களை வலுப்படுத்துவதற்கும் எல்லைப் பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை (20.02.2026) அசாமில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் கச்சார் மாவட்டத்தில் உள்ள நாதன்பூர் கிராமத்தில் தொடங்கப்படுகிறது.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம், எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களின் விரிவான, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முழுமையாகப் பயனளிக்க கூடிய ஒருங்கிணைப்பு சார்ந்த அணுகுமுறை மூலம் நிறைவேற்றப்படுகிறது. அத்தியாவசிய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கவனம் செலுத்தும்.

எல்லைப் பகுதி கிராமங்களை வலுப்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் அப்பகுதி மக்களை அங்கீகரித்து, அவர்களை நாட்டின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட வைக்க உதவுகிறது. இதன் மூலம் எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க முடியும். இத்திட்டம் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2028–29-ம் நிதியாண்டு வரை ₹6,839 கோடி செலவில் செயல்படுத்தப்படும் மத்திய அரசுத் திட்டமாகும். இரண்டாம் கட்டத் திட்டம் 15 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும்.

***

(Release ID: 2230157)

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230218) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Kannada