PIB Headquarters
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்புகள்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 9:24AM by PIB Chennai
இந்தியாவின் மக்கள்தொகை செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்கு உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதால் டிஜிட்டல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உத்திசார் செயல்பாடுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தேசிய அளவிலான முன்முயற்சிகள் வாயிலாகவும், நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், நவீன ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறனை விரைவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், குறைந்த செலவில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம் சிறுநகரங்களிலும் புதுமை கண்டுபிடிப்புகள், தரவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இளைஞர்கள் தலைமையிலான புதுமை கண்டுபிடிப்புகளுக்கான செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உலக அளவிலான செயற்கை நுண்ணறிவின் தாக்கத்திற்கு ஏற்ப இந்தியாவை நிலைநிறுத்திக் கொள்ள உதவிடும். பொறுப்புணர்வுடன் கூடிய உள்ளடக்கிய பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கும் இது வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230044®=3&lang=1
----
AD/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230216)
வருகையாளர் எண்ணிக்கை : 12