மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

சமூகம், பொருளாதாரத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த உச்சிமாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 9:07AM by PIB Chennai

பெருமளவிலான மக்களிடையே சமூக, பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப பயன்பாட்டைக் கொண்ட 110-க்கும் அதிகமான புத்தொழில் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்களின் விவரங்கள் இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது. இதில் சுகாதாரம், விவசாயம், கல்வி, பருவநிலை, நிதி சார் உள்ளடக்கம், நகர்ப்புற செயல்பாடுகள் மற்றும் பொதுச்சேவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அடங்கும்.

உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப பயன்பாட்டை வடிவமைப்பது இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் வகையில், இந்த உச்சிமாநாடு அமைந்துள்ளது.

உற்பத்திக்கான இந்தியா திட்டத்திற்கு உதவிடும் வகையிலும், பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிடும் வகையிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதன்மையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் கூடிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை அடையாளம் காண்பது குறித்தும், உலக அளவில் வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கொண்டு செல்வது குறித்தும் இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230041&reg=3&lang=1

----

AD/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230215) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu