பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய செர்பிய அதிபர்: பிரதமர் திரு. மோடி வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 7:57PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு  துறையில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்குச் சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை, பிரதமர் திரு. நரேந்திர மோடி  வரவேற்றுள்ளார். செர்பிய நாட்டின் அதிபர் மேதகு திரு. அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić), இந்தியாவின் ஏஐ  தாக்கம் குறித்த உச்சிமாநாடு தொடர்பாக எழுதியுள்ள கட்டுரைக்கு இந்தப் பாராட்டு கிடைத்துள்ளது.

செர்பிய அதிபர் தனது கட்டுரையில், 'இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாடு' என்பது வெறும் மாநாடு மட்டுமல்ல; இது செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய விவாதங்களில் இந்தியாவை மையப்புள்ளியாக நிலைநிறுத்தும் ஒரு தீர்மானகரமான தருணம் என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்துப் பிரதமரின் அலுவலகம்  தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாடு வெறும் மாநாடு மட்டுமல்ல என்றும், இந்த உச்சிமாநாடு செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய விவாதங்களின் மையத்தில் இந்தியாவை எவ்வாறு உறுதியாக நிலைநிறுத்துகிறது என்பதையும் செர்பிய அதிபர் விரிவாக விளக்கியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229290&reg=3&lang=1

 வெளியிட்டு அடையாள எண் : 2229290)

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229363) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada