சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் முறையாக தேனீ வழித்தடங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 3:10PM by PIB Chennai
நீடிக்கத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உறுதிபாட்டை வலியுறுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் முறையாக தேனீ வழித்தடங்கள் அமைக்கும் முன்முயற்சியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அலங்கார மரங்கள் வளர்ப்பு என்பதிலிருந்து சுற்றுச்சூழலுக்கு மாறுவதை குறிக்கும் விதமாக, ஆண்டு முழுவதும் தேன் கிடைக்கும் வகையிலும், மகரந்த சேர்க்கை நடைபெறும் வகையிலும் மலர் தரும் மரங்களுடன் தேனீ வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த முன்முயற்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவும்.
தனித்துவமான இந்த முன்முயற்சியின் மூலம் மரங்கள், புதர்கள், மூலிகைச் செடிகள், பலவகைப் புற்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வழித்தடங்கள் அமைக்கப்படும். நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் பட்ட மரங்கள், அடிமரப் பொந்துகள் போன்றவற்றில் பூ பூக்கும் கொடிகளைப் படர விடுவதன் மூலம் தொடர்ச்சியாக தேன் கிடைப்பதோடு, மகரந்தச் சேர்க்கையும் நடைபெறும். வேம்பு போன்ற உள்ளூர் மரங்களும் நெடுஞ்சாலை ஓரங்களில் வளர்க்கப்படும்.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டரிலிருந்து 1 கிலோ மீட்டர் இடைவெளியில் மரங்கள் மற்றும் செடிகள் தொகுப்பு இருப்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் களப் பணியாளர்கள் அடையாளம் காண்பார்கள். 2026-27 காலத்தில் குறைந்தபட்சம் 3 மகரந்தச் சேர்க்கை வழித்தடங்கள் அமைக்கவும், 40 லட்சம் மரக்கன்றுகள் நடவும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதில், 60 சதவீதம் தேனீ வழித்தடத் திட்டத்தின் கீழ் நடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229103®=3&lang=1
***
AD/SMB/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229188)
வருகையாளர் எண்ணிக்கை : 16