குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா கர்ப்பூரி தாக்கூர் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 11:01AM by PIB Chennai

பாரத ரத்னா கர்ப்பூரித் தாக்கூர் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அன்னாரது உருவப்படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், சமூக நீதி, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளித்தல், பொதுச் சேவை ஆகியவற்றுக்காக தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த  உண்மையான மக்கள் நாயகராக  திரு கர்ப்பூரி தாக்கூர் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

அவரது எளிமை, ஒருங்கிணைப்பு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் நமது ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2228978)

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229042) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam