பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட், சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி கதை குறித்து பிடிஐ பேட்டியில் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 12:01PM by PIB Chennai

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (பிடிஐ)  பிரத்யேக நேர்காணலில், பிரதமர் திரு  நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பாதையை வடிவமைக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த தமது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டைப் பற்றிப் பேசிய பிரதமர், உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதிலும் அதன் பங்கை விளக்கினார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டும் வகையில், "சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" -ன் உந்துதலை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு  மோடி கூறியிருப்பதாவது:

"பிடிஐ உடனான இந்தப் பேட்டியில் , இந்த ஆண்டு பட்ஜெட், சீர்திருத்த எக்ஸ்பிரஸ், உலகம் ஏன் இந்தியாவுடன் வணிகம் செய்ய விரும்புகிறது, என்டிஏ அரசின் எம்எஸ்எம்இ-க்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான முயற்சிகள், பாதுகாப்புக்கு முக்கியத்துவம்  போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த எனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளேன்."

***

(Release ID: 2228579)

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2228741) வருகையாளர் எண்ணிக்கை : 12