மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சாதனையைப் பாராட்டி மாநிலங்களவையில், அவைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரை

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2026 1:57PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே, ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்று நாட்டிற்கு சிறந்த கௌரவத்தை அளித்து சிறப்பான சாதனைப் படைத்தது மகத்தான பெருமை என்று நான் குறிப்பிடுகிறேன்.  

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்ற இந்த குறிப்பிடத்தக்க முயற்சியின் மூலம், நமது இளைஞர்களிடையேயான மிகுந்த திறமை, உறுதிப்பாடு, விளையாட்டுத் திறன் ஆகியவை மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே, நான் எப்போதும் அணியை பாராட்டுகிறேன். இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியைச் சார்ந்தது என்ற வேளையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 175 ரன் எடுத்த சாதனைப் படைத்த இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சார்பாகவும் இந்த அவையின் சார்பாகவும் அணித்தலைவர், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் காலங்களில் இந்த இளைய சாம்பியன்கள் மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன்.

 

(Release ID: 2225343)

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2225587) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Bengali , Gujarati , Telugu