நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருமான வரிச் சட்டம் - 2025-ன் விதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக்களைக் கோருகிறது மத்திய நேரடி வரிகள் வாரியம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2026 11:06AM by PIB Chennai

வருமான வரிச் சட்டம் -2025, ஆகஸ்ட் 2025-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

வருமான வரி விதிகள், படிவங்கள் ஆகியவை தொடர்பான இறுதி அறிவிப்புக்கு முன், சம்பந்தப்பட்ட தரப்பினரின் விரிவான கருத்துக்களை கேட்பதற்காக, தற்போது முன்மொழியப்பட்டுள்ள வருமான வரி விதிகளும் படிவங்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometaxindia.gov.in என்ற தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. பரந்த அளவிலான ஆலோசனைக்குப் பிறகு இவை தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தரப்பினர் இதைப் படித்து பரிந்துரைகளைச் செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவை தொகுக்கப்பட்டு இறுதி அறிவிப்புக்கு முன் மதிப்பாய்வுக்காக பரிசீலிக்கப்படும். பரந்த அளவிலான ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் பின்வரும் நான்கு பிரிவுகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து உள்ளீடுகளையும் பரிந்துரைகளையும் வரவேற்கிறது:

* மொழி எளிமைப்படுத்தல்

* சட்ட நடவடிக்கைகளைக் குறைத்தல்

* இணக்கச் சுமையைக் குறைத்தல்

* தேவையற்ற/காலாவதியான விதிகளையும் படிவங்களையும் அடையாளம் காணுதல்

இதை பின்வரும் இணைப்பு மூலம் அணுகலாம்: https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/ita-comprehensive-review

இந்த இணைப்பில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை போன்றவற்றைப் பதிவு செய்து தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம். இதில் ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும். அனைத்து பரிந்துரைகளும், மேற்கூறிய நான்கு பிரிவுகளின் கீழ் இருக்க வேண்டும்.

***

(Release ID: 2225061)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2225227) வருகையாளர் எண்ணிக்கை : 129
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada , Malayalam