மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்பான, மீள்தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவுக்காக நாடுகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் குடிமக்களை ஒன்றிணைப்பதற்கான உச்சி மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 FEB 2026 2:00PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஒரு எதிர்கால கருத்தாக இருக்காது. இந்தியர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள், வேலை செய்கிறார்கள், சேவைகளை அணுகுகிறார்கள் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்கிறார்கள் என்பதை இது ஏற்கனவே மறுவடிவமைத்து வருகிறது. 2026, பிப்ரவரி 6 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் இந்தியா - எங்கள் நிபுணர்களைக் கேளுங்கள் என்ற நிகழ்வில் இந்த செய்தி மையமாக இருந்தது. இதில் வரவிருக்கும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு குறித்து இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அபிஷேக் சிங்குடன் ஈர்ப்பான, சிந்தனையைத் தூண்டும் உரையாடல் இடம்பெற்றது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உரையாடல்களை, குறிப்பாக வளரும் பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய தெற்குப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உண்மையான, பயன்படுத்தக்கூடிய விளைவுகளாக மாற்றுவதை இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. "இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் மூலம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உரையாடலை இந்தியா நோக்கத்திலிருந்து தாக்கத்திற்கு நகர்த்துகிறது. செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம், திறன்கள் மற்றும் நன்மைகள் அனைவருக்கும், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது" என்று திரு சிங் கூறினார்.
பொதுவான அச்சங்கள், கற்பிதங்களைப் போக்கிய திரு சிங், செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு மாற்றானது அல்ல, மாறாக மனித திறனை அதிகரிப்பது என்பதைத் தெளிவுபடுத்தினார். சில பணிகள் மாறும். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு புதிய வேலைகள், புதிய திறன்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - குறிப்பாக இந்தியாவின் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு. இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தை விட, தொடர்ச்சியான கற்றல், தகவமைப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
***
(Release ID: 2224845)
TV/SMB/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225047)
வருகையாளர் எண்ணிக்கை : 6