ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் 260 பெட்டிகளை தயாரிப்பதற்கு திட்டம் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 4:59PM by PIB Chennai

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் 260 பெட்டிகளை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டி உற்பத்தித் திட்டம், பிஇஎம்எல் மற்றும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப கூட்டாளர்கள் மூலம் முன்மாதிரி தயாரிப்பு, சோதனைகள், தொடர்ச்சியான உற்பத்தி என பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவை மற்றும் செயல்பாட்டு தயார்நிலை அடிப்படையில் பயணிகளின் வழக்கமான சேவைக்காக இந்த ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான, வசதியான பயணத்தை கருத்தில் கொண்டும் இந்த ரயில் பெட்டிகள் மேம்பட்ட அம்சங்களுடன் நவீன பெட்டிகளாக தயாரிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

இத்தகவலை மக்களவையில் இன்று ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2223201)

TV/IR/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223460) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Gujarati , Odia , Kannada , Malayalam