வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேலம்- குமாரபாளையம் ஆறு வழித்தடத் திட்டம், திட்டமிடல் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 12:20PM by PIB Chennai

கட்டமைப்பு  திட்டமிடல் குழுவின்  108-வது கூட்டம் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையில்  நடைபெற்றது. உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. பிரதமரின் விரைவு சக்தி  தேசிய பெருந்திட்டத்துடன் இணைந்து பன்முக இணைப்பு மற்றும் தளவாடப் போக்குவரத்து  செயல்திறனை மேம்படுத்துவதில் கூட்டம் கவனம் செலுத்தியது. ஒருங்கிணைந்த பன்முக உள்கட்டமைப்பு, பொருளாதார மற்றும்  கடைசி மைல் இணைப்பு சாலைத் திட்டங்களை மதிப்பீடு செய்தது.

 இதில், சேலம் முதல் குமாரபாளையம் வரையிலான ஆறு வழித்தடத்தை உருவாக்க சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கொச்சி - கோயம்புத்தூர் - பெங்களூரு சரக்கு மற்றும் பயணிகள் வழித்தடத்தில் மொத்தம் 102.035 கி.மீ நீளத்தை உள்ளடக்கியது. எதிர்கால போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிய மற்றும் சிறிய பாலங்கள், மேம்பாலங்கள், சாலை மேம்பாலம் மற்றும் அகலப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

கொச்சி-கோயம்புத்தூர்-பெங்களூரு பொருளாதார வழித்தடத்துடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் மேம்பட்ட சாலை-ரயில்-விமான-துறைமுக இணைப்புகள் மூலம் திறமையான சரக்கு இயக்கம், நீண்ட தூர போக்குவரத்து மற்றும் பன்முனை இணைப்பை ஆதரிக்கும், அதே நேரத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகியவற்றை இணைக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முதல் மற்றும் கடைசி மைல் அணுகல், விமான நிலைய இணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். இது ஜவுளி, வேளாண் பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் கொள்கலன் சரக்கு உள்ளிட்ட துறைகளுக்கு பயனளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222964&reg=3&lang=1

***

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2223206) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati