தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருங்கால வைப்பு நிதிக்கான வருமான வரி சீர்திருத்தத்தை வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரவேற்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 2:13PM by PIB Chennai

அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிகள் வருமான வரிச் சட்டம், 2025-ன் அட்டவணை XI ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது, வருமான வரி விதிகள் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் பிறவகை ஏற்பாடுகள் சட்டம், 1952-ன் பிரிவு 17-ன் கீழ் விலக்கு பெறுவதற்கான தகுதியில் வேறுபாடு உள்ளது. மேலும், வருமான வரி விதிகள் மற்றும் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்ன் கீழ் அறிவிக்கப்பட்ட முதலீட்டு முறையும் மாறுபடும். இரண்டு சட்டங்களிலும் வேலை வழங்குவோரின் பங்களிப்பு வரம்புகள் சீரமைக்கப்படவில்லை. இந்த வேறுபாடுகள் குழப்பத்தை உருவாக்கி தவிர்க்கக்கூடிய வழக்குகள் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிகளை நிர்வகிக்கும் வருமான வரி கட்டமைப்பை, ஊழியர் வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் பிறவகை ஏற்பாடுகள் சட்டம், 1952 மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம், 1952 ஆகியவற்றின் சட்டரீதியான மற்றும் நிர்வாக விதிகளுடன் மத்திய பட்ஜெட் (2026-2027) சீரமைத்துள்ளது.

1952-ம் ஆண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிறவகை  ஏற்பாடுகள் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்கு பெற்ற வருங்கால வைப்பு நிதிக்கு மட்டுமே வருமான வரிச் சட்டம், 2025-ன் கீழ் அங்கீகாரம் கிடைக்கும்.

பொருந்தக்கூடிய ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்  கட்டமைப்பு மற்றும் துணைச்சட்டத்தின் கீழ் முதலீட்டு விதிமுறைகள் தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்படும். அரசுப் பத்திரங்களில் முதலீட்டை 50% ஆகக் கட்டுப்படுத்தும் சட்டரீதியான உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.

வேலை வழங்குவோரின் பங்களிப்பு 7.5 லட்சம் ரூபாய் பண உச்சவரம்பால் நிர்வகிக்கப்படும். இந்த பண உச்சவரம்பு கடந்ததும், பங்களிப்புகள் சலுகைகளாகக் கருதி வரி விதிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் (2026-2027) வருமான வரி முறையை சீர்திருத்துவது, வருங்கால வைப்பு நிதிச் சட்டத்துடன் ஒத்திசைந்திருப்பதால் அதன் பங்குதாரர்களின் நலன்களை நீண்ட காலத்திற்குப் பராமரிக்கும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222490&reg=3&lang=1

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222774) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Malayalam