புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 டிசம்பர் மாத நிலவரப்படி பிரதமரின் வீட்டுக் கூரை சூரிய சக்தி: கட்டணமில்லா மின்சாரத் திட்டத்தின் கீழ் 26 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 1:33PM by PIB Chennai

பிரதமரின் வீட்டுக் கூரை  சூரிய சக்தி: கட்டணமில்லா மின்சாரத் திட்டம்  என்பது தேவை சார்ந்த ஒரு திட்டமாகும். இதில் உள்ளூர் டிஸ்காமின் மின்தொகுப்புடன் மின்சார இணைப்பைக் கொண்ட நாட்டில் உள்ள அனைத்துக் குடியிருப்பு வாடிக்கையாளரும், இத்திட்டத்திற்கான தேசிய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். பிப்ரவரி 2024-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின், நாடு முழுவதும் மொத்தம் 20,85,514  கூரை சூரியத் தகடு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.  இதன் மூலம் 2025 டிசம்பர் வரை 26,14,446 குடும்பங்களுக்கு மத்திய நிதி உதவியாக  ரூ.14,771.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் தமிழ்நாட்டில் மொத்தம் 51,227 கூரை சூரியத் தகடு அமைப்புகள் நிறுவப்பட்டு 59,517 குடும்பங்கள்

பயனடைந்துள்ளன. இதற்கு ரூ. 353.34 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 2,221 கூரை சூரியத் தகடு அமைப்புகள் நிறுவப்பட்டு 2,221 குடும்பங்கள்

பயனடைந்துள்ளன. இதற்கு ரூ. 15.28 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளில் கூரை சூரியத் தகடு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் 1,000 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதன் விளைவாக கூரை சூரியத் தகடு அமைப்புகளின் ஆயுட்காலமான 25 ஆண்டுகளில் 720 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வு குறையக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222476&reg=3&lang=1

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222737) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Kannada