சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் அமைப்புகளை மட்டுமல்ல, சமூகங்கள், கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரங்களையும் ஈரநிலங்கள் வளர்க்கின்றன மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2026 6:48PM by PIB Chennai

சுற்றுச்சூழல் அமைப்புகளை மட்டுமல்ல, சமூகங்கள், கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரங்களையும் ஈரநிலங்கள் வளர்க்கின்றன என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். 2026 உலக ஈரநில தினத்தை முன்னிட்டு, தனது எக்ஸ் தள பதிவில் நீர் என்பது உயிர் என்றும், ஈரநிலங்கள் பூமியின் உயிர்நாடிகள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஈரநிலப் பாதுகாப்புக்கான அணுகுமுறையில் சமூகங்களையும் கலாச்சாரத்தையும் இந்தியா மையமாகக் கொண்டுள்ளது என்று திரு யாதவ் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுற்றுச்சூழல் உணர்வுள்ள தலைமையின் கீழ், இந்தியாவின் ராம்சர் வலையமைப்பு 2014 இல் 26 இடங்களிலிருந்து 98 இடங்களாக விரிவடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உலக ஈரநில தினத்தைக் குறிக்கும் வகையில், அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் அமைச்சகத்தால் 'ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய ஞானம்: கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்' என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பில் பாரம்பரிய ஞானம் மற்றும் சமூகங்களின் பங்கு குறித்து இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், ஈரநிலங்கள் வெறும் நீர்வளங்கள் மட்டுமல்ல, மக்களின் அன்றாட சமூக வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். ஈரநிலங்கள் கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் மத உணர்வுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்றும், பாரம்பரியமாக குழந்தைகள் உட்பட மக்கள் இணைந்து கலந்துரையாடும்  இடங்களாகும் என்றும் அவர் கூறினார்.

ஈரநிலப் பாதுகாப்பில் இளைய தலைமுறையினரின் ஈடுபாடு அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது என்றும், பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2222283)

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2222392) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati