சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ராம்சர் பட்டியலில் 2 புதிய ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 31 JAN 2026 10:11AM by PIB Chennai

உலக ஈரநிலங்கள் தினம் பிப்ரவரி 02 - ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தையொட்டி,மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்தியாவின் ராம்சர் தளங்கள் பட்டியலில், இரண்டு புதிய ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், உத்தரப் பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள சாரி-தாண்ட் ஆகியவை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி காலத்தில், இந்தியாவின் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014 - ம் ஆண்டில் 26 தளங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, தற்போது 98 தளங்களாக, 276 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சர்வதேச அங்கீகாரம், சுற்றுச்சூழல், ஈரநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில், இந்தியாவின் வலுவான செயல்பாடுகளை பிரதிபலிபதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரண்டு ஈரநிலங்களும் நூற்றுக்கணக்கான வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவை இனங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த பகுதிகள், அழிந்து வரும் பறவைகளைத் தவிர, சிங்காரா, ஓநாய்கள், காரக்கால், பாலைவனப் பூனைகள் மற்றும் பாலைவன நரிகள் போன்ற வனவிலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளன.

ஈரானின் ராம்சர் நகரில், கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இது குறித்த உடன்படிக்கை ஒன்றில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1982 - ம் ஆண்டு பிப்ரவரி 1 - ம் தேதி இந்தியா இந்த உடன்பாட்டில்  கையெழுத்திட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221114&reg=3&lang=1

***

TV/SV/RK


(रिलीज़ आईडी: 2221229) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam