உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திப்ருகரில் அசாம் சட்டமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
30 JAN 2026 6:14PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திப்ருகரில் அசாம் சட்டமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மொத்தம் ₹1,715 கோடி மதிப்பீட்டில் 5 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதான் மூலம், திப்ருகர் பெருமளவு பயனடையும் என்று கூறினார். மேலும், புகழ்பெற்ற அசாம் தேயிலை, பாரிஸ் முதல் பெர்லின் வரை வரி ஏதுமின்றி சென்றடைய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில், அசாமில் மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை சாத்தியமாக்கியிருப்பதாக திரு அமித் ஷா கூறினார். அசாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ₹4.1 லட்சம் கோடியிலிருந்து ₹7.2 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ஆட்சியின் கீழ், அசாம் குண்டுவெடிப்புகள், வன்முறை மற்றும் இளைஞர்களின் மரணம் அரங்கேறியது என்றும், திரு மோடி அரசின் தலைமையின் கீழ், இளைஞர்களின் வருமானம் 50% வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். அமைதி, வளர்ச்சி, கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை தற்போதைய அரசால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். மகாத்மா காந்தி, தனது இயக்கங்கள் மூலம் முழு நாட்டையும் விழிப்படையச் செய்து, நாட்டு மக்களுக்காக சுயராஜ்யத்தைப் பெற்றுத் தந்தார் என்று கூறிய அமைச்சர், அன்னாரை தாம் சிரம் தாழ்த்தி வணங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220956®=3&lang=1
(Release ID: 2220956)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2221082)
आगंतुक पटल : 7