உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர விமான விபத்தை தொடர்ந்து புலனாய்வு முறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 29 JAN 2026 11:23AM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி அருகே நிகழ்ந்த எதிர்பாராத விமான விபத்தை தொடர்ந்து புலனாய்வு முறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக தொடங்கியுள்ளது. முழுமையான, வெளிப்படையான மற்றும் குறித்த காலத்திற்குள் விசாரணையை முடிக்க முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்கிறது.

ஜனவரி 28 அன்று விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தில்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் மும்பை மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்றடைந்தனர். அதே நாளில் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு ஜி வி ஜி யுகேந்தரும் சம்பவ இடத்திற்கு சென்றார். புலனாய்வு விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முழு உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219896&reg=3&lang=1

**

TV/IR/RK/EA


(रिलीज़ आईडी: 2220122) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam