பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா பாரமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2026 11:22AM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி மாவட்டத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் குறித்து தமது எண்ணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தத் துயரமான தருணத்தில் கவலைப்படும் குடும்பத்தினர் வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“மகாராஷ்டிரா பாரமதியில் நிகழ்ந்த விமான விபத்து கவலை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் குறித்து எனது எண்ணங்கள் உள்ளது. இந்தத் துயரமான தருணத்தில் கவலைப்படும் குடும்பத்தினர் வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திக்கிறேன்”.
**
(Release ID: 2219452)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2219532)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam