நிதி அமைச்சகம்
2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் ஹல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் புதுதில்லியில் இன்று தொடங்கியது
प्रविष्टि तिथि:
27 JAN 2026 4:21PM by PIB Chennai
2026-27-ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டு தயாரிப்புக்கான இறுதிக்கட்டப் பணிகள் ஹல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் புதுதில்லியில் இன்று தொடங்கியது. நார்த் பிளாக்கில் உள்ள பட்ஜெட் அச்சக பிரிவில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி ஆகியோர் தலைமையில் இது நடைபெற்றது.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் மூடிய அறையில் நடைபெறுகிறது. 2026-27 மத்திய பட்ஜெட் 2026 பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஹல்வா தயாரிப்பு நிகழ்ச்சியில், நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்புடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர், பட்ஜெட் அச்சக பிரிவையும் தயாரிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு இதில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219158®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2219289)
आगंतुक पटल : 13