பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவருடன் புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 1:33PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவர் திருமதி காஜா கல்லசுடன் புதுதில்லியில் 2026 ஜனவரி 27 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகிய கொள்கைகளை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் பகிர்ந்து கொள்வது கூட்டாண்மையை வலுவாக்குகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இதனை உலகளாவிய ஸ்திரத்தன்மை, நீடித்த வளரச்சி, வளமைக்கான ஒத்துழைப்பை நேரடியாக ஏற்படுத்த இந்தியா விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.

உலக நலனுக்காக இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைகள், அவசியம் இணைந்து முயற்சிக்க வேண்டும் என்று திருராஜ் நாத் சிங் வலியுறுத்தினார்

77-வது குடியரசு தின நிகழ்ச்சியில் திருமதி கல்லாஸ் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தந்தது சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார். கடமைப் பாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் ஐரோப்பிய யூனியன் பங்கேற்றதுடன் இந்தியாவின் 77-வது  குடியரசு தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பங்கேற்க அழைத்தமைக்காக திருமதி காஜா கல்லாஸ் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் அவசியம் ஒருங்கிணைந்து செயல்பட்டு கூட்டுப் பயிற்சியின் மூலம் சிறந்த நடைமுறைகளை இருதரப்பினரும் கற்றுக் கொள்ள வேண்டும்  என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219030&reg=3&lang=1  

-----

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2219181) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam