உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துளைத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 JAN 2026 11:04AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நமது வலுவான ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் உள்துறை அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
"நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான குடியரசு தின வாழ்த்துகள். இந்த சந்தர்ப்பத்தில், நமது வலுவான ஜனநாயகத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். வாருங்கள், அரசியல் சட்ட விழுமியங்களை மேலும் வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்கவும் மோடி அவர்கள் தலைமையில் உறுதியேற்போம்" என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218721®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2218783)
आगंतुक पटल : 12