பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எரிசக்தி வாரம் 2026, கோவாவில் உலகளாவிய எரிசக்தித் தலைமையை ஒன்றிணைக்கும்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி

प्रविष्टि तिथि: 23 JAN 2026 6:05PM by PIB Chennai

கோவாவில் ஜனவரி 27-30, 2026 வரை நடைபெறவிருக்கும் இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2026, சர்வதேச நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள், தொழில் துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களை ஒன்றிணைக்கும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்திய எரிசக்தி வாரம் 2026 குறித்த செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய அவர், இந்தத் தளம், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல், முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

 

 இதில் 75,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 180 சர்வதேச கண்காட்சியாளர்கள், 500 க்கும் மேற்பட்ட உலகளாவிய பேச்சாளர்கள் மற்றும் சுமார் 120 மாநாட்டு அமர்வுகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள். பங்கேற்பின் அளவு மற்றும் பன்முகத்தன்மை உலகளாவிய எரிசக்தி மாநாட்டை வடிவமைப்பதில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைப் பங்கை பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

பிரதான மாநாட்டுடன் முக்கிய துணை நிகழ்வுகள் மற்றும் வட்டமேசை மாநாடுகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார். இதில் பிரதமரின் 9வது வட்டமேசை மாநாடும் அடங்கும். இந்த மாநாட்டில் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைத் தலைவர்கள், உலகளாவிய எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் ஆகியோருடன் பிரதமர் உரையாடுவார். இந்த முதன்மையான நிகழ்வு, எரிசக்தித் துறையில் உத்திசார் கூட்டாண்மைகள் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியை வளர்ப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் திரு பூரி கூறினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217765&reg=3&lang=1

 

(Release ID: 2217765)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2217952) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam