PIB Headquarters
ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டம் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய திறனை அங்கீகரிக்கிறது
प्रविष्टि तिथि:
23 JAN 2026 9:55AM by PIB Chennai
ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டம், உள்ளூர் கைவினைஞர்களை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய திறன்களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், 770-க்கும் அதிகமான மாவட்டங்கள் பொருளாதார மையங்களாக உருவெடுத்து வருகிறது. அரசின் மின்னணு சந்தை போன்ற முன்முயற்சிகள் உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவற்கு உதவுகின்றன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்பு மிக்க தயாரிப்பு அடையாளம் காணப்பட்டு, அதற்கு வணிக முத்திரை வழங்குவதுடன், சந்தைவாய்ப்புகளை விரிவுப்படுத்தவும் வகை செய்கிறது.
மேலும் கைவினைப் பொருட்களுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் உள்ளூர் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களது வருவாயை அதிகரிக்க உதவுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தற்சார்பு நிலையை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இத்தகைய முயற்சிகள் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவுவதுடன், தொழில்முனைவோரை தேசிய அளவிலும், உலகளாவிய சந்தைகளிலும் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும் வகை செய்கிறது.
விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217539®=3&lang=1
****
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2217877)
आगंतुक पटल : 11