வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
துபாயில் நடைபெற்று வரும் வளைகுடா உணவுத் திருவிழா நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் 8 உயர்திறன் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
23 JAN 2026 11:45AM by PIB Chennai
துபாயி்ல் நடைபெற்று வரும் வளைகுடா உணவுத் திருவிழா நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உயர் திறன் கொண்ட 8 புத்தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இந்த உணவுத் திருவிழாவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் புதிய மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், பழச்சாறுகள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள புத்தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 121 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் வேளாண் வளர்ச்சி மற்றும் பிராந்திய பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டும் வகையில் 25 மாநிலங்கள், பிராந்தியங்களைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்கின்னர். அசாம், பீகார், சத்தீஷ்கர், தில்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் தேசிய தோட்டக்கலை வாரியம், உத்தராகண்ட், இந்திய தேயிலை வாரியம், தேசிய மஞ்சள் வாரியம், இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நிறுவனங்களும் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். வேளாண் உணவு மற்றும் வேளாண்துறையில் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்ட பாரதிய அரங்கில் தேசிய அளவில் செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 உயர் திறன் கொண்ட புத்தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் ஏற்றுமதிக்கான சலுகைகள் குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217581®=3&lang=1
**
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2217798)
आगंतुक पटल : 18