உள்துறை அமைச்சகம்
உலகின் அனைத்து சிக்கல்களுக்கான தீர்வு இந்திய பாரம்பரியத்திற்குள் உள்ளது- மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
प्रविष्टि तिथि:
22 JAN 2026 5:12PM by PIB Chennai
உலகின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இந்திய பாரம்பரியம் கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாதா பகவதி தேவி சர்மா ஜி-ன் நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் அகண்ட தீபத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஹரித்துவாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திரு அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், தடையற்ற ஆற்றலை உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், முழு உலகிற்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மதமும், அறிவியலும் ஒன்றோடொன்று சார்ந்துள்ளதாகவும், விவாதங்கள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பண்டிட் ராம் சர்மா ஜி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஹரித்துவாரில் உள்ள சிறார்கள், வேதத்தையும் மடிக்கணினியையும் ஒருசேர பயின்று வருவது நாட்டின் பாரம்பரியமும், வளர்ச்சியும் இணைந்து செல்ல முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காயத்திரி மந்திரத்தின் ஆற்றலும் உணர்வும் உலக நாடுகள் அனைத்துக்கும் நன்மை அளிக்கும் உணர்வுடன் முன்னேற்றப் பாதையில் செல்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகள், 24 நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் போது துணிச்சல், புத்திக் கூர்மை, உதவி செய்வது போன்ற குணநலங்களையும் மேம்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட இயக்கம் முதல் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் வரை பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஜி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பதஞ்சலி அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையையும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217317®=3&lang=1
***
TV/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2217416)
आगंतुक पटल : 11