சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்பன் செறிவூட்டப்பட்ட 208 தொழில்களுக்கான பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கான இலக்குகளை மத்திய அரசு அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 22 JAN 2026 3:04PM by PIB Chennai

கார்பன் செறிவூட்டப்பட்ட தொழில்களுக்கான பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் குறித்த இலக்குகளை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் அலுமினியம் போன்ற தொழில்துறைகளுக்கான கார்பன் வெளியேற்றம் தொடர்பான இணக்க நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கார்பன் செறிவூட்டப்பட்ட 208 நிறுவனங்களுக்கு பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்திற்கான இலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அலுமினியம், சிமெண்ட், காகிதக்கூழ் உள்ளிட்ட 282 தொழில் நிறுவனங்களுக்கு இந்தப் புதிய நடைமுறைகள் பொருந்தும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217239&reg=3&lang=1

***

AD/SV/KPG/SE


(रिलीज़ आईडी: 2217391) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam