பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஜனவரி 23 அன்று கேரளா செல்கிறார்

கேரளா முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் மூன்று அமிர்த பாரத விரைவு ரயில்களைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 22 JAN 2026 2:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 23 அன்று கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில், திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே  அவர் உரையாற்றுவார்.

இந்தத் திட்டங்கள், ரயில் இணைப்பு, நகர்ப்புற வாழ்வாதாரங்கள், அறிவியல் மற்றும் புத்தாக்கம், மக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளை உள்ளடக்கியதாகும்.  இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தில் பிரதமரின் தொடர்ச்சியான கவனத்தைப் பிரதிபலிக்கிறது.

ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று அமிர்த பாரத விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் என நான்கு புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இவற்றில் நாகர்கோவில்-மங்களூரு அமிர்த பாரத விரைவு ரயில், திருவனந்தபுரம்-தாம்பரம் அமிர்த பாரத விரைவு ரயில், திருவனந்தபுரம்-சார்லபள்ளி அமிர்த பாரத விரைவு ரயில், திருச்சூர்- குருவாயூர் இடையே ஒரு புதிய பயணிகள் ரயில் ஆகியவை அடங்கும். இந்த சேவைகளை அறிமுகம் செய்வது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா இடையேயான நீண்ட தூர மற்றும் பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். பயணிகளுக்கு பயணத்தை மிகவும் குறைந்த செலவில், பாதுகாப்பானதாக, நேரத்திற்குட்பட்டதாக மாற்றும். மேம்படுத்தப்பட்ட இந்த இணைப்பு, பிராந்தியம் முழுவதும் சுற்றுலா, வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும்.

சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிநவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வசதி சிக்கலான மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் துல்லியமான சிகிச்சையை வழங்கும். இந்தப் பிராந்தியத்தின்  மூன்றாம் நிலை சுகாதாரத் திறன்களை மேம்படுத்தும்.

திருவனந்தபுரத்தில் உள்ள புதிய பூஜப்புரா தலைமை தபால் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைப்பார். இந்த நவீன, தொழில்நுட்ப வசதி, விரிவான அஞ்சல், வங்கி, காப்பீடு மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கும். மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை இது மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217219&reg=3&lang=1

***

AD/SMB/KR


(रिलीज़ आईडी: 2217306) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam