மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு நாடுகளின் முதல் வரிசையில் இந்தியா அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

प्रविष्टि तिथि: 21 JAN 2026 4:05PM by PIB Chennai

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் குழுவிலேயே இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் வலிமை என்பது அதன் மாதிரிகளின் அளவைப் பொறுத்தது அல்ல, மாறாக அதன் பரவலான பயன்பாடு மற்றும் பொருளாதாரப் பயனைப் பொறுத்ததே என்று அவர் விளக்கினார்.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வியூகம் குறித்துப் பேசிய அமைச்சர், நாட்டில் 38,000 ஜிபியு  வசதிகள் கொண்ட பொதுக் கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் உலகளாவிய செலவை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்த விலையில் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த வசதியைப் பெற முடியும். மேலும், ஒரு கோடி மக்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் மாபெரும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை குறித்துப் பேசிய திரு. அஸ்வினி வைஷ்ணவ், சட்ட ரீதியான அணுகுமுறையோடு தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பும் அவசியம் என்றார். குறிப்பாக, பொய் தகவல்கள் மற்றும் தகவல்களில் உள்ள பாரபட்சங்களைக் கண்டறிந்து தடுக்கப் புதிய தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்ற இந்த அமர்வில், இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு சாதனைகளையும் அவர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216895&reg=3&lang=1      

---

TV/VK/RK


(रिलीज़ आईडी: 2217096) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam