ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு

प्रविष्टि तिथि: 20 JAN 2026 7:57PM by PIB Chennai

காமாக்யா (KYQ) மற்றும் ஹவுரா (HWH) இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் (ரயில் எண். 27576) முதல் சேவை பயணிகளிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.  முன்பதிவு மையங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள், அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்த ரயிலின் முதல் வணிகப் பயணத்தை 2026 ஜனவரி 22 முதல் காமாக்யாவிலிருந்தும், ஜனவரி 23 முதல் ஹவுராவிலிருந்தும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவைக்கான பயணச் சீட்டு முன்பதிவு ஜனவரி 19, 2026 அன்று காலை 8 மணிக்குத் தொடங்கின. 24 மணி நேரத்திற்குள், அனைத்து வகுப்புகளுக்கான பயணச் சீட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன.

மக்களிடையே எழுந்துள்ள இத்தகைய வரவேற்பு, வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான ரயில் பயணங்களுக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது. காமாக்யா - ஹவுரா வந்தே பாரத் ஸ்லீப்பர், வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியா இடையேயான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன வசதிகள், குறைவான பயண நேரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த இரவு நேர பயண அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216566&reg=3&lang=1

 

(Release ID: 2216566)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2216642) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada