குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ராம ஜென்மபூமி இயக்கம் குறித்த புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
20 JAN 2026 6:59PM by PIB Chennai
இந்திய அரசின் முன்னாள் செயலாளர் திரு சுரேந்திர குமார் பச்சௌரி எழுதிய "சாலீஸ் ஆஃப் அம்ப்ரோசியா: ராம் ஜன்மபூமி - சேலஞ் & ரெஸ்பான்ஸ்" என்ற புத்தகத்தை, குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
விழாவில் பேசிய குடியரசு துணைத்தலைவர், ஸ்ரீ ராமரின் பிறப்பிடத்தை மீட்டெடுப்பதற்கான பல நூற்றாண்டுகள் பழமையான போராட்டத்தை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துவதுடன், சமநிலை, ஒற்றுணர்வு மற்றும் அறிவார்ந்த கட்டுப்பாடுடன் வரலாற்றுக் கதையை முன்வைக்கிறது என்று குறிப்பிட்டார்.
அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயத்தின் கட்டுமானம் இந்தியாவின் நாகரிகப் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணத்தைக் குறிக்கிறது என்றும், அங்கு நம்பிக்கை, வரலாறு, சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை கண்ணியத்துடன் ஒன்றிணைந்துள்ளன என்றும் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான கோயில்கள் வேறு இடங்களில் கட்டப்பட்டாலும், ராமர் பிறந்த இடத்தில் ஒரு கோயிலின் முக்கியத்துவத்திற்கு வேறு எதுவும் ஈடு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ராமர் பிறந்த இடத்தை நிறுவுவதற்குத் தேவையான நீண்ட செயல்முறை வேதனையளிப்பதாகக் கூறிய குடியரசு துணைத்தலைவர், இதுபோன்ற சூழ்நிலையை மற்ற பெரும்பாலான நாடுகளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தெரிவித்தார். ஒட்டுமொத்த நாட்டின் நம்பிக்கையைக் கடந்து, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் ஆதாரங்களுக்குப் பிறகுதான் நிலம் ஒதுக்கப்பட்டது என்றும், இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். அதனால்தான் இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
நீதிக்கான நீண்டகால போராட்டத்திற்கு வரலாற்று ஆவணங்களில் உள்ள இடைவெளிகள் பங்களித்ததாக குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்த வரலாற்று இயக்கத்தின் நவீன கட்டத்தை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துவதுடன்,எதிர்கால சந்ததியினர் தேசிய சுயமரியாதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட தியாகங்கள் மற்றும் போராட்டங்களை அறிந்திருப்பதை உறுதி செய்கிறது என்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைமையில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற நிதியுதவி பிரச்சாரத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்தப் பிரச்சாரம் வாயிலாக உலகெங்கிலும் உள்ள பக்தர்களிடமிருந்து சுமார் ₹3,000 கோடி திரட்டப்பட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. 1990களில் தனது தாயார் சிலா பூஜையில் பங்கேற்றது குறித்த தனிப்பட்ட நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
உண்மையான மகத்துவம் ராஜ்ஜியங்களை ஆள்வதை விட, நல்லொழுக்கத்திலும் இதயங்களை வெல்வதிலும் உள்ளது என்பதை பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும் லட்சியங்களும் மனிதகுலத்திற்குக் கற்பிக்கின்றன என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். காலத்தால் அழியாத இந்த லட்சியங்களை குடிமக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்ற பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216540®=3&lang=1
(Release ID: 2216540)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2216639)
आगंतुक पटल : 6