தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல்துறை நாடு முழுவதும் 887 ஏடிஎம் மையங்களை அமைப்பதன் மூலம் ஏடிஎம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 20 JAN 2026 3:43PM by PIB Chennai

வங்கிச் சேவைகளை மேலும் அணுகக் கூடியதாகவும் உகந்ததாகவும் திகழச் செய்வதன் மற்றொரு பெரிய நடவடிக்கையாக அஞ்சல்துறை நாடு முழுவதும் தமது ஏடிஎம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

பல்வேறு அஞ்சல் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த 887 ஏடிஎம் மையங்கள் மக்களுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கு அருகே தேவையான வங்கிச் சேவைகளைப் பெற உதவுகிறது. இந்த முன்முயற்சியின் மூலம் குறிப்பாக ஊரகப் பகுதி, கடைகோடி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயனடைகின்றனர். இந்த ஏடிஎம் மையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளவும் கணக்கில் உள்ள இருப்புகளை சரிபார்க்கவும் இதர அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் வசதியை அளிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறையின் இந்த ஏடிஎம் சேவைகளை மக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216418&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2216543) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada