ரெயில்வே அமைச்சகம்
தை அமாவாசையையொட்டி 2 வாரங்களில் 244 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது
प्रविष्टि तिथि:
19 JAN 2026 5:42PM by PIB Chennai
தை அமாவாசையையொட்டி பக்தர்களின் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில், 2026 ஜனவரி 3 முதல் நாடு முழுவதும் 244 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியது. வடக்கு ரயில்வே மூலம் 31 ரயில்களும், வடக்கு மத்திய ரயில்வே மூலம் 158 ரயில்களும் வடகிழக்கு ரயில்வே மூலம் 55 ரயில்களும் இயக்கப்பட்டு 4.5 லட்சம் பயணிகளுக்கு சேவை அளிக்கப்பட்டது. ஜனவரி 18 அன்று வடக்கு ரயில்வே மூலம் 11 ரயில்களும், வடக்கு மத்திய ரயில்வே மூலம் 22 ரயில்களும் வடகிழக்கு ரயில்வே மூலம் 7 ரயில்களும் என 40 சிறப்பு ரயில்கள் பிரயாக்ராஜூக்கு இயக்கப்பட்டது. இதனால் ஒரு லட்சம் பயணிகள் பயனடைந்தனர். அத்துடன் அனைத்து வழக்கமான ரயில்களும் பட்டியலிட்டபடி இயக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216191®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2216255)
आगंतुक पटल : 9