புவி அறிவியல் அமைச்சகம்
அந்தமான் - நிகோபார் தீவுகளின் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல், பொருளாதார பாதுகாப்பிற்கு அவசியம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
19 JAN 2026 12:15PM by PIB Chennai
அந்தமான் - நிகோபார் தீவுகளின் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல், பொருளாதார பாதுகாப்பிற்கு அவசியமானது என மத்திய புவி அறிவியில் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அந்தமான் – நிகோபார் பிராந்திய மையத்தில் இன்று (19 ஜனவரி 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த தீவுகள் பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆய்வுக்கு உகந்த பகுதியாக திகழ்வதுடன், அதிநவீன அறிவியல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்வாதார நடைமுறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது, கடல்சார் பொருளாதார வளர்ச்சி போன்ற தேசிய கொள்கைகளுக்கு தேவையான அறிவியல் அடிப்படையிலான தரவுகளை உருவாக்குவதில் இந்த விலங்கியல் ஆய்வு மையம் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
1977-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் அந்தமான் - நிகோபார் மண்டல அலுவலகம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது வெப்பமண்டல தீவில் உள்ள பல்லுயிர் பெருக்க ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. இந்த மையம் இதுவரை 90 ஆராய்ச்சி திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன் விஞ்ஞானிகளின் 85 புத்தகங்களையும், புகழ்பெற்ற தேசிய, சர்வதேச அளவில் வெளிவரும் பல்வேறு இதழ்களில் 850-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216000®=3&lang=1
AD/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2216229)
आगंतुक पटल : 14