பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தின் சிங்கூரில் ₹830 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வளச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் நாட்டின் கிழக்குப் பகுதியின் வளர்ச்சி முன்னுரிமையாக உள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
18 JAN 2026 3:53PM by PIB Chennai
மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் இன்று (18.01.2026) ₹830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி அவசியம் என்றும், இதற்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.
மேற்கு வங்கத்தில் நீர்வழிப் பாதைகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்றும், மத்திய அரசு இதை மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சிறிது நேரத்திற்கு முன்பு, துறைமுகங்கள், நதி நீர்வழிகள் தொடர்பான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதாக அவர் கூறினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு இவை மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
துறைமுகங்களுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், இங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில், ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் திறன் விரிவாக்கத்தில் மத்திய அரசு பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது என்று அவர் கூறினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த துறைமுகத்தின் இணைப்பை மேம்படுத்த சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலன்கள் இப்போது தெரியத் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு சரக்கு கையாளுதலில் கொல்கத்தா துறைமுகம் புதிய சாதனைகளைப் படைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாலகாரில் மேம்படுத்தப்பட்டு வரும் நீட்டிக்கப்பட்ட துறைமுக வாயில் அமைப்பு ஹூக்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிய வாய்ப்புகளைத் வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கங்கையில் கட்டப்பட்ட நீர்வழிப்பாதை மூலம் சரக்கு போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இந்த முழு உள்கட்டமைப்பும் ஹூக்ளியை ஒரு வர்த்தக மையமாக மாற்ற உதவும் என்றும், நூற்றுக்கணக்கான புதிய முதலீடுகளைக் கொண்டுவரும் என்றும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா பசுமைப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். தடையற்ற போக்குவரத்தை செயல்படுத்த, துறைமுகங்கள், நதி நீர்வழிகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இது சரக்குப் போக்குவரத்துச் செலவுகள், போக்குவரத்து நேரம் ஆகியவற்றைக் குறைக்கிறது என்று அவர் கூறினார். போக்குவரத்து முறைகள் இயற்கைக்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மீன்பிடித் தொழிலிலும், கடல் உணவு ஏற்றுமதியிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் துறையில் மேற்கு வங்கம் நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற தமது கனவை அவர் வெளிப்படுத்தினார். மத்திய அரசால் தொடங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பயணத்தை துரிதப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுத் தமது உரையை நிறைவு செய்தார்.
மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு சாந்தனு தாக்கூர், திரு சுகந்த மஜும்தார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
ஹூக்ளியின் சிங்கூரில் ₹830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பாலகாரில் விரிவாக்கப்பட்ட துறைமுக நுழைவாயில் அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கொல்கத்தாவில் ஒரு அதிநவீன மின்சார மோட்டார் படகையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஜெயராம்பதி - பரோகோபிநாத்பூர் - மைனாபூர் புதிய ரயில் பாதையையும் அவர் தொடங்கி வைத்தார்.
மூன்று அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கொல்கத்தா (ஹவுரா) - ஆனந்த் விஹார் முனையம்; கொல்கத்தா (சீல்டா) - பனாரஸ்; கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் ஆகியவை அந்த ரயில்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215821®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215866)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada