உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த அரசியல் வித்தகராகவும், கலாச்சார அடையாளமாகவும், திரைப்படத்துறை, அரசியல் ஆகிய இரண்டிலும் எம்.ஜி.ஆர் காலத்தால் அழியாத அளப்பரிய பங்காற்றியுள்ளார் - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 17 JAN 2026 3:11PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக சமுக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த அரசியல் வித்தகராகவும், கலாச்சார அடையாளமாகவும், எம்.ஜி.ஆர் திரைப்படம், அரசியல் ஆகிய இரண்டிலும் காலத்தால் அழியாத அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, மக்களின் நலனை உறுதி செய்வதன் வாயிலாக, அவர் எப்போதும் மாற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் தமிழ் திரைப்படங்கள், கலாச்சாரம், பெருமையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், தொடர்ந்து நம் அனைவரின் மனதிலும் வாழ்ந்து வருவதாகவும், இந்தியர்களின் எதிர்காலத் தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும், திரு அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

***

(Release ID: 2215587)

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2215631) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam