ஆயுஷ்
ஆயுர்வேத அடிப்படையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
17 JAN 2026 1:10PM by PIB Chennai
தேசிய புத்தொழில் தினத்தை முன்னிட்டு, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமான ஏஐஐஏ (AIIA), அதன் புத்தொழில் பாதுகாப்பு மையத்தின் மூலம், ஆயுர்வேத அடிப்படையிலான புத்தொழில்களுக்கான, குறு சிறு நடுத்தர தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதன் புதுதில்லி வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாடு அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஆயுர்வேதம் சுகாதார கண்டுபிடிப்புகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இந்த அமர்வுகளில் அரசு ஆதரவு திட்டங்கள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு, சான்றிதழ் தேவைகள், தர நிர்ணயம் தொடர்பான தேவைகள், ஆரம்ப கட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழிமுறைகள் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்து உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு மேம்பாட்டு துறையின் முன்னாள் விஞ்ஞானி திருமதி சங்கீதா நாகர் எடுத்துரைத்தார். புத்தொழில்களுக்கும் குரு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கும் கிடைக்கும் கடன் ஆதரவு வழிமுறைகள் மற்றும் நிதி வாய்ப்புகள் குறித்து சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் மூத்த மேலாளர் திருமதி ஜோதி நீரஜ் விளக்கினார்.
தேசிய புத்தொழில் தினமான நேற்று (16.01.2026) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஆயுர்வேதத்தில் தொழில்முனைவையும் புதுமைகளையும் ஊக்குவிப்பதற்கான ஏஐஐஏ-வின் அர்ப்பணிப்பை எடுத்துரைப்பதாக அமைந்தது.
***
(Release ID: 2215547)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2215601)
आगंतुक पटल : 15